தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்யும் தொகுப்பாளினி DD?

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .தொகுப்பாளர் வேலையே பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.ஆரம்பத்தில் இருப்பது போல் தொடர்ந்து நிகழ்ச்சியில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடி வருகிறார்.தனது கடின உழைப்பால் தற்போது தனக்கான இடத்தினை உருவாக்கி உள்ளார் திவ்ய தர்ஷினி

தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்யும் தொகுப்பாளினி DD? 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்தவர் இவர்.தற்போது கிடைக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்யும் தொகுப்பாளினி DD? 2

விளம்பரம்

இவர் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் ஆகி சிறிது நாட்களிலேயே விவாகரத்து வாங்கி பிரிந்து கொண்டனர்.தற்போது தனியாக வாழ்ந்து வரும் திவ்ய தர்ஷினிக்கு வாழ்க்கை துணை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என குடும்பத்தார் முடிவெடுத்து,கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை DD க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment