ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார்.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பிரியங்கா.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் நடக்காது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை கவர்ந்தார்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்
தற்போது பிரியங்கா தனது 31வது பிறந்தநாளை நடனமாடி கொண்டாடியுள்ளார்,அதுவும் வெளிநாட்டு நடுரோட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ப்ரியங்காவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,இந்த வீடியோ பிரியங்கா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in