தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.தற்போது ரஹ்மான் வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்த படங்களின் பாடல்கள் பெருமளவு ஹிட் அடித்தது.மேலும் நடப்பாண்டில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பல படங்கள் வெளியாக உள்ளது.
இவர் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்பாடலை பாடியவர் பாடகி மது ஸ்ரீ.இப்பாடலுக்காக இவர் விருது வாங்கியுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதற்கு வாழ்த்துக்களை கூறிய ரஹ்மான் கூடவே தமிழ் விரைவில் கற்றுக்கொள்வது எப்படி என்கிற இணைய லிங்கினையும் அனுப்பி அவரை தமிழ் கத்துகிட சொல்லி கலாய்த்துள்ளார்.இந்த பதிவில் ரசிகர்கள் ரஹ்மான் சேட்டை புடிச்ச பையன்க என கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/arrahman/status/1643396840908541953
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in