உலக சினிமா முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடந்துள்ளது.கொரோனா பரவலால் குறைந்த அளவு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகளின் கல்யாணத்தினை எளிமையாக முடித்துள்ளார் ரஹ்மான்.தனது ட்வீட்டர் பக்கத்தில் மகள் மற்றும் மருமகனுடன் இணைந்து எடுத்த குடும்ப புகைப்படத்தினை பதிவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறிய பிறகே திருமணம் நடந்துள்ளது பலருக்கும் தெரியவந்துள்ளது.பலரும் புதுமண தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.கதிஜா ரஹ்மானின் கணவர் பெயர் தீன் ஷேக் முகமது.இவர் ஒரு சவுண்டு இன்ஜினியர். மேலும் இவர் ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் தான் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில தினங்களுக்கு முன்னாள் ஏ ஆர் ரஹ்மான் தனது மகள் திருமணத்திற்காக வரவேற்பு வைத்திருந்தார்.இதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டு மண மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிலையில் கதிஜா ரஹ்மான் தனது கணவருடன் எடுத்த முதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கதீஜா கணவர் கன்னத்தினை ஆசையாக செல்லமாக கிள்ளி கொஞ்சியுள்ளார்.தற்போது இந்த வீடியோவை ரசிகர்களை இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in