தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வளம் வருபவர் அருண் விஜய். சினிமாவில் நடிக்க எளிதாக வாய்ப்பு கிடைத்தாலும் ஆரம்பகாலத்தில் அவரால் ஒரு வெற்றிப்படத்தை தர முடியவில்லை. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்தும் அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக்கொண்டிருந்த அருண் விஜய்க்கு நீண்ட நாட்கள் கழித்து என்னை அறிந்தால் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய். கிடைத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அருண் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. அதன் பிறகு இவர் நடித்த குற்றம் 23, செக்க செவந்த வானம் , தடம் , மாஃபியா தொடர் வெற்றிகளை தேடித்தந்தது. ஆரம்பகாலத்தில் தோல்வி படத்தை கொடுத்தாலும் இன்று சினிமாவில் கம்பேக் குடுத்து வெற்றியை நிலைநாட்டியுள்ளார் அருண் விஜய்.
Bang On 🔥
Back to Back updates from @All_in_pictures about the Mission #AV31 Starring @arunvijayno1 @ReginaCassandra Dir by @dirarivazhagan 🎉Title Look On Apr 14th | FL On Apr 15th!
@stefyPatel @SamCSmusic @11_11cinema @DoneChannel1 @proyuvraaj pic.twitter.com/fhQSpd7ZDT— Jaya TV (@JayaTvOfficial) April 12, 2021
தற்போது இவறது 31வது படமான அருண் விஜய் 31 படத்தின் first look வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படத்தின் அருண்விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. தற்போது அருண் விஜய் 31 படத்தை, குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in