கவினின் அஸ்கு மாரோ பாடல் | தேஜு அஸ்வினி சிவாங்கி

விளம்பரம்

விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களுள் ஒருவர் கவின் ராஜ். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கனா காணும் காலங்களுக்கு அடுத்து இவர் சரவணண்மீனாட்சி சீரியலில் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே பிரபலமான செரிலாக இருந்து 2 பாகம் வரை வெளியான சரவணன் மீனாட்சியில் வேட்டையனாக வந்து அனைவரது மனதையும் வேட்டையாடி சென்றார். இந்நிலையில் இவர் அடுத்த கட்டம் செல்வதற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படம் இவர் நடிப்பில் வெளியானது.

இப்போது டிரெண்டிங்   சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்!

கவினின் அஸ்கு மாரோ பாடல் | தேஜு அஸ்வினி சிவாங்கி 1

விளம்பரம்

தாமதமாக வெளியான காரணத்தால் இந்த படம் அவருக்கு எதிர்ப்பதா அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை. அதன் பிறகு கவின் விஜய் டிவி யின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது நிதர்சனமான உண்மை. இதை தொடர்ந்து இவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. இதன் தொடர்ச்சியாக இவர் நடித்த அஸ்கு மாரோ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

இப்போது டிரெண்டிங்   பாலாவாக மாறிய கெளதம் மேனன்? போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

இதில் தேஜு அஸ்வினி கவினுக்கு ஜோடியாக நடனமாடி உள்ளார். மேலும் குக்கு வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி இந்த பாடலில் இடம்பெற்றுள்ளார். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராகவும் டாங்கிலி ஜம்போ இயக்கி உள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment