நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16 1947.சுதந்திர காலகட்டத்தில் கிராம மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது அதே சமயம் அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததே தெரியவில்லை என்றால் அதனால் ஏற்படும் நிகழ்வுகளை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் புகழ் நடித்துள்ளார்.மேலும் பல நடிகர்களும் அந்த காலகட்டத்திற்கே சென்று அங்கேயே வாழ்வதாக நினைத்து படங்களில் வாழ்ந்து இருக்கின்றனர் என்பது படத்தினை பார்க்கும் பொழுது தெரிகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது செங்காடு கிராமம்,இந்த கிராமம் முழுவதையும் வெள்ளைக்காரன் ராபர்ட் ஆண்டு வருகிறான்.மக்களை துன்புறுத்தி அங்கு வசிப்பவர்களை 16 மணி நேரம் பருத்தி எடுக்கும் வேலை வாங்கி கொடுமை படுத்தி வருகிறான்.அந்த வெள்ளைக்காரன் ராபர்ட் ரிச்சர்ட் மகன் அந்த கிராமத்தில் வயதுக்கு வரும் பெண்ணையெல்லாம் சீரழிப்பதை குறிக்கோளாக கொண்டு வருகிறான்.இந்நிலையில் ஜமீன்தார் தனது மகள் ரிச்சர்ட் கண்ணில் பட்டுவிட கூடாது என்பதற்காக அவர் சிறுவயதிலேயே இறந்துவிடுவதாக கூறுகிறார்,ஆனாலும் ஜமீன்தார் மகள் ரிச்சர்ட் கண்ணில் பட்டுவிடவே அவரை அடைய நினைக்கிறன் ரிச்சர்ட்,அவனிடமிருந்து மகளை காக்க அவரை உயிருடன் சமாதி செய்கிறார்.இந்நிலையில் சிறுவயதில் இருந்தே ஜமீன்தார் மகளை காதலிக்கும் கவுதம் கார்த்திக் அவரை அங்கிருந்து காப்பாற்றி செல்கிறார்.இதன் பின் என்ன ஆகிறது என்பது தான் படத்தின் கதை
சுதந்திரம் கிடைப்பதே செங்காடு மக்களுக்கு தெரியாமல் இருப்பதே படத்தின் முக்கிய கதை,அதனை சுற்றி இயக்குனர் திரைக்கதை அமைத்திருந்தால் இப்படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனலாம்.ஒவ்வொரு கலைஞர்களும் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியுள்ளது படத்திற்கு கூடுதல் சிறப்பு.தனது அம்மாவை ஆங்கிலேயரிடம் காட்டி கொடுப்பதால் ஊர் மக்கள் மீது கடுப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக் ஜமீன்தார் வீட்டில் வேலை செய்து வருகிறார்.அங்கு ஜமீன்தார் மகள் ரேவதி மீது காதல் கொள்ளும் கவுதம் காதலி கிடைக்கவில்லை என்ற கட்டத்திலும் வெள்ளையர்களை எதிர்ப்பதிலும் தனது சிறப்பான நடிப்பினை காண்பித்துள்ளார்.முதல்முறையாக குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ் கைதட்டல்களை பெற்றுள்ளார்.
வில்லனாக வரும் ராபர்ட் மற்றும் ரீச்சர்ட் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்,அந்தளவுக்கு வெறித்தனமாக வில்லத்தனத்தை காண்பித்துள்ளார்கள்.ஷான் ரோல்டன் இசை படத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை பாடல்களை கேட்கும் பொழுது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று உணரவைக்கிறது.சுதந்திரம் கிடைத்துவிட்டது ஊர் மக்களுக்கு தெரிவதே படத்தின் முக்கிய கதை அதை சொல்லும் விதத்தில் கொஞ்சம் அழுத்தத்தை சேர்த்திருந்தால் படம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்
ஆகஸ்ட் 16 1947 படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/4
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in