தமிழ் சினிமாவில் நடிகை மீனாவுக்காக பெரும் ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் இன்று வரை உள்ளது.காரணம் தமிழில் பல நல்ல படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றதால் ,தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்து இன்றுவரை சினிமாவிற்காக தான் வாழ்ந்து வருகிறார் மீனா.சினிமாவில் சம்பாதிப்பது என்பதை தாண்டி சினிமாவினை காதல் செய்து நடித்து வருகிறார்.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தையில் இருந்து நடித்து வருபவர் மீனா.இவர்கள் கூட்டணியில் உருவாகிய படங்கள் அனைத்தும் வெற்றியை மட்டும் தான் இவர்களுக்கு அளித்துள்ளது.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளத்திலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.வித்தியாசாகர் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவர்.அம்மா பார்த்த பையன் என்பதால் மீனா திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.இவருக்கும் பெரும் எதிர்காலம் உள்ளது என்பது இவர் நடிப்பின் மூலமே தெரிகிறது மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் சில தினங்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார்.இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் திரை உலகிற்கும் அளித்தது.
சிறுவயதிலேயே தகப்பனை இழந்த பேபி நைனிகா தந்தைக்கு செய்த கடைசி மரியாதைகள் மக்களின் மனதில் நீங்காத சொத்தினை ஏற்படுத்தியது.சிறுவயதில் எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாத ஒன்று மீனாவுக்கு நடந்துள்ளது பெரும் சோகத்தினை அளிக்கும் விதமாக அமைந்த்துள்ளது.இந்நிலையில் பேபி நைனிகா தனது தந்தையுடன் கடைசி பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்க்கும் பொழுது மேலும் இது சோகத்தினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இந்த குழந்தைக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என இந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : creative vibes
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in