விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள் இந்நிலையில் இவருக்கும் ராதிகாவுக்கும் ஆன உறவு மனைவி பாக்கியாவுக்கு தெரிந்தது.இதனால் வீட்டில் பிரச்சனை வெடித்து பாக்கியா இனி கோபியுடன் வாழமாட்டேன் என கூறி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.
தற்போது அம்மாவுக்காகவும் மகளுக்காகவும் பாக்கியாவை மீண்டும் அழைக்க செல்கிறார்.அங்கு பாக்கியா உங்களுடன் வரமாட்டேன்,நீங்கள் திரும்ப இப்படி செய்ய மாட்டிர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் எனக்கு உறுதி தாருங்கள் என கூறவே,கோபி ராதிகாவை திருமணம் செய்த பிறகு பாக்கியாவுக்கு விவாகரத்து கொடுத்துவிடுவோம் அதுவரை பாக்கியா நம்முடன் இருக்கட்டும் என நினைத்து,சத்தியமா சொல்லுறேன் நீ தான் என் வாழ்க்கை ராதிகான்னு பெயரை மாற்றி சொல்லி மாட்டி விடுகிறார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நாடகத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in