விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் பாக்கிய லெட்சுமி. இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சுசித்ரா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “சைவம்” என்ற படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பாக்கிய லெட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இவரின் யதார்த்த நடிப்பும், நம் வீட்டில் நம் அம்மா போலவே வெகுளி கதாபாத்திரமாக இருப்பதால் இந்த நாடகம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது.
முன்பெல்லாம் நாடகம் என்றாலே சன்டிவி என்று இருந்த நிலையை மாற்றியது விஜய்டிவி.
குடும்ப பாங்கான தொடர்களையும், வில்லன் வில்லி கதாபாத்திரங்களும், நெகடிவ் கதாபாத்திரங்களும் குறைவாக இருப்பதால் விஜய் டிவி தொடர்களை மக்கள் விரும்பி பார்க்க தொடங்கினர். அந்த வகையில் பாக்கிய லெட்சுமி, பாண்டியன் ஸ்டார்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம் போன்ற தொடர்கள் டாப் ஹிட்டில் உள்ளன. இதில் பாக்கிய லெட்சுமி சற்று வித்தியாசமானது. அதில் வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர். இதில் கதாநாயகன் கோபிக்கு மனைவி குழந்தைகள் இருந்த போதிலும், அவர் தனது கல்லூரி கால தோழியிடன் மீண்டும் தொடர்பில் இருப்பது போன்றும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது தோழியை திருமணம் செய்து கொள்ள இருப்பது போலவும் கதை நகர்ந்து கொண்டுள்ளது. YouTube Video Code Embed Credits: Cinema Vikatan
இதை பாக்கியா கண்டுபிடிப்பாரா? இல்லையா என்பது தான் கதையின் விறுவிறுப்புக்கு காரணம். இந்த கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் சதீஷ். இவர் இப்படி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இவருக்கு வெளியே பல எதிர்ப்புகள் உள்ளன. நாடகத்தை நாடகமாக பாருங்கள், கதைப்படி அந்த கதாபாத்திரம் அப்படி என்று பலமுறை சமூக வலைத்தளங்களில் தோன்றி விளக்கமளித்துவிட்டார். ஆனாலும் அவரை இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மக்கள் தப்பு தப்பாக திட்டுவதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் பேட்டியளித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in