நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய நடிகை வித்யூலேகா ராமன்,நகைச்சுவை நடிகரான இவர் இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படம் ஓடுதோ இல்லையோ இவரது காமெடி காட்சிகள் நிறைய படங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது.இதனாலேயே இவருக்கு தமிழ் மொழியில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் நடித்து சினிமாவில் பெரும் வரவேற்பினை பெற்றவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் உடல் எடை பருமன் ஆன இவர் தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க சரி அதனையும் ஒருமுறை முயற்சி செய்து பாப்போம் என விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களையும் நடுவர்களையும் அசத்தி வருகிறார் வித்யூலேகா.அனைவருக்கும் வித்யூலேகா ஒரு கடினமான போட்டியாளராக தான் அமைந்துள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி படப்பிடிப்பின் இடைவெளிகளில் கோமாளிகள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.அனைவரும் நடனமாடுவது,சேட்டை செய்வது என போட்டியாளர்களும் கோமாளிகளும் இணைந்து அலப்பறை செய்து வருகின்றனர்.இதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டும் வருகிறார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று கொண்டாடப்பட்டது.இதில் பழைய சீசன் போட்டியாளர்களும் கலந்துகொண்டு அசத்தினார்.இந்த படப்பிடிப்பின் பொழுது இடைவெளியில் கோமாளி மற்றும் குக்குகள் இணைந்து நடனம் ஆடும்பொழுது பாலா வித்யுலேகாவின் காலை ஒரே மிதி மிதித்துள்ளார்.இதனால் வலி தாங்காமல் கத்தியுள்ளார் வித்யூலேகா இந்த வீடியோவை கண்டு சிறிது மகிழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in