இயக்குனர் பாரதிராஜா மேல்சிகிச்சைக்காக மருத்துவமனை மாற்றம்

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.பல அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியவர் இவர்.நடிகர் கமல்ஹாசனை வைத்து 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவுக்குள் கால்தடம் பதித்தார் பாரதிராஜா.இப்படம் பெரும் வரவேற்பினை சினிமா ரசிகர்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே யாரும் எட்ட முடியாத உயரத்தினை அடைந்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா மேல்சிகிச்சைக்காக மருத்துவமனை மாற்றம் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் என பல தரமான படங்களை அளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ரசிகர்களால் பாரதிராஜா செல்லமாக இயக்குனர் இமயம் என அழைக்கப்பட்டார்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.முதுமை காரணமாக தற்போது படங்கள் இயக்க ஆர்வம் காட்டாத பாரதிராஜா படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

இயக்குனர் பாரதிராஜா மேல்சிகிச்சைக்காக மருத்துவமனை மாற்றம் 2

விளம்பரம்

இந்நிலையில் பாரதி ராஜா உடல்நல குறைவால் கடந்த 23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு நுரையீரலில் நீர் தேக்கம் இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை அரும்பாக்கம் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மேலும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும்,தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரை பார்த்த பின்னர் கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment