மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரை பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் அபிராமி.மாடலிங் போட்டியில் கலந்துக்கொண்டு மிஸ் தமிழ்நாடு என்ற டைட்டிலை வெற்றிபெற்றவர்.நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிக்க வாய்ப்பு தேடினார்,அப்பொழுது இவருக்கு வாய்ப்பு Ctrl Alt Del என்ற வெப் சீரிஸ் மூலம் கிடைத்தது.இந்த தொடரில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் முதல் முதலாக வெள்ளித்திரையில் நடித்த படம் நோட்டா.இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது இவர் படித்த கலாஷேத்ரா பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியரான ஹரிபத்மன் என்பவர் தவறாக நடந்துகொண்டதாக கூறி மாணவிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் மாணவிகளின் போராட்டத்தினால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது அந்த ஆசிரியருக்கு ஆதரவாக பிக் பாஸ் அபிராமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனால் அவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தி அதில் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார்,அதில் அவர் கூறியதாவது ,கைதாகி இருக்கும் ஹரிபத்மன் ரொம்ப நல்லவர்,அவர் எங்களிடமெல்லாம் தவறாக நடந்துகொள்ளவில்லை.தற்போது மாணவிகள் தூண்டிவிடப்படுகிறார்கள்,அதற்கு மாணவிகள் தான் காரணம் என பேசியுள்ளார்.இதற்கு நெட்டிசன்கள் பயங்கர கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : CINE ULAGAM
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in