பிரபல நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர். பலர் இவரின் நாடகத்திற்கு பெரும் ரசிகர்களாக இருந்தனர்.எந்த அளவிற்கு என்றால் கொரோனா ஊரடங்கில் பணம் கொடுத்து உதவும் அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.காரணம் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான நாடக கலையை அதிகம் விரும்புவதால்.இந்நிலையில் தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.சரி எதாவது சாதிப்போம் என அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாத தமிழர்கள் எவரும் இல்லை என்ற அளவிற்கு வந்துவிட்டனர்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை அதிகமாகி கவர்ந்தார் .ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
யாரும் எதிர்பாராத விதமாக சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.
எப்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.அண்மையில் இவர்
குத்தாட்டம் போட்டு வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது தாய்க்கிழவி பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியேல்லாம் ஆடுவீங்களா என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in