தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி அக்டொபர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அண்மையில் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தினை ராஜு ஜெயமோகன் பிடித்து டைட்டிலை தட்டி சென்றார் பிரியங்கா இரண்டாவது இடத்தினை பிடித்தார்.இதனை தொடர்நது பிக் பாஸ் 24 மணி நேரம் நேரலையிலும் பிக் பாஸ் அல்டிமேட் என வெளியாகியது.இதற்கும் மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர்.இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்,பின்னர் பட வேளைகளில் பிசியாகியதால் நடிகர் சிம்பு முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
இதுவரை இல்லாத புதிய யுக்தியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கடைபிடிக்க உள்ளது.இது வரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது பிக் பாஸ்.மேலும் கடந்த சீசன்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறாததால் இம்முறை புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பிக் பாஸ் 6வது சீசன் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்துகொள்ள இருப்பவர்கள் முழு விபரங்களை பட்டியலை கீழே காணலாம்
1.சீரியல் நடிகை ஸ்ரீநிதி
2.தயாரிப்பாளர் ரவிந்தர்
3.சூப்பர் மாடல் ஷ்ரினா
4.ஷில்பா மஞ்சுநாத்
5.பாடகி ராஜலக்ஷ்மி
6.தொகுப்பாளினி மகேஸ்வரி
7.மதுரை முத்து
8.ஆயிஷா
9.சீரியல் நடிகர் மணிகண்டன்
10. ரட்சிதா மகாலக்ஷ்மி
11.ராபர்ட் மாஸ்டர்
12.விசித்ரா
13.மனிஷாயாதவ்
14.நடன இயக்குனர் மணி
15.மெட்டி ஒலி சாந்தி
16.செய்திவாசிப்பாளர் ரஞ்சித்
17. தொகுப்பாளினி அர்ச்சனா
18.மைனா நந்தினி
19.அமுதவாணன்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in