ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.
இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.
அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.
பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in