சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர் தான் தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்த தாமரை, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி இம்மி அளவும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே!
எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசி பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக கலக்கி வந்த தாமரைக்கு வீட்டில் ஆதரவு கரங்கள் அதிகம் நீண்டன. விளையாட்டை பற்றி தெரியாவிட்டாலும் அதை பற்றி தெரிந்து கொண்டு அதை சிறப்பாக விளையாடி ஜெயிப்பார். மேலும், மற்றவர்களை போல ஒய்வு எடுத்துக்கொண்டே இருக்காமல் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் சேர்த்து பார்த்து செய்ததும் நாம் பார்த்திருப்போம்! இறுதிவரை தாமரை இருப்பார் என மக்கள் தீர்க்கமாக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிரூப் காப்பாற்றப்பட்டு தாமரை புறக்கணிக்கப்பட்டார். மேலும், தாமரையை வெளியே அனுப்பியது சரியே இல்லை என்றும் மக்கள் பலரும் கூறி வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Galatta
தற்போது ஜூலி, தாமரையிடம் சென்று ஏன் தாலி அணியவில்லை என்று கேட்கிறார். அதற்கு தாமரை நாங்கள் திருமணம் செய்து கொள்ளும் பொது எங்களிடம் தங்கம் வாங்க வசதி இல்லை. எனவே கவரிங் தாலி வாங்கி அணிந்தேன். அனால் கவரிங் எனக்கு ஒத்து வரவில்லை எனவே தான் தாலி அணிவதில்லை. வெளியே சென்றவுடன் தங்கத்தில் தாலி வாங்கி அணிவேன் என்று பதில் அளித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in