தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பணிபுரிந்து வருபவர் அண்ணாமலை.கர்நாடகாவை சேர்ந்த இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.விருப்ப ஓய்வு பெற்ற இவர் நாட்டு நலன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியலில் இணைந்தார்.இவரது கடின உழைப்பிற்கு பரிசாக பாரதிய ஜனதா கட்சி இவரை தமிழ்நாட்டு கட்சி தலைவர் ஆக்கியது.
இந்த பதவியை சந்தோசமாக ஏற்றுக்கொண்ட அண்ணாமலை தொடர்ந்து அதிகமாக பிஜேபி க்காக குரல் கொடுக்க தொடங்கினார்.மிகவும் சுறுசுறுப்பாக கட்சிக்காக இன்றுவரை இயங்கி வருகிறார் அண்ணாமலை.இவர் தற்போது கன்னட சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.முழுநேர அரசியல்வாதியாக இருந்த இவர் தற்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நடித்துள்ளார் அண்ணாமலை.
பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வரும்,இரண்டு கைகளை இழந்தும் நீச்சலில் சாதனை படைத்த விஸ்வாசின் கதையில் உருவாகி வரும் அரபி எனும் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார் அண்ணாமலை. இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கதை பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்ட அண்ணாமலை இப்படத்திற்காக ரூ 1 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் டீசர் வெளியாகவில்லை,இதனால் பிஜேபி கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில் இதுகுறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது,அதில் தொழில்நுட்ப கோளாறுகாரணமாக படத்தின் டீசரை வெளியிட முடியவில்லை,விரைவில் மறு அறிவிப்பு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கண்ட சினிமா ரசிகர்கள் என்னடா இது,முதல் படத்திலேயே அண்ணாமலைக்கு அபசகுணமாக இப்படி டீசர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in