ஆண்டுதோறும் பல மொழி சினிமாக்களுக்கு இடையே நடிகர்களை வைத்து கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் தமிழ் அணி சார்பாக சென்னை ரைனோஸ் விளையாடி வருகிறது.இதில் சாந்தனு,கலையரசன்,ஜீவா,ஆர்யா,அசோக் செல்வன் ,பரத்,விக்ராந்த்,சாந்தனு என பலரும் உள்ளனர்.இந்த ஆண்டு நடைபெற்று வரும் போட்டியில் தெலுங்கு வாரியார் அணியிடம் மோத அங்கு சென்றுள்ளனர்.அங்கு அனைவரும் தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளனர்.இந்த தீவிர பயிற்சியின் போதும் நடிகர்கள் அனைவரும் செம்ம கூலாக சிரித்து ஒருவரையொருவர் கலாய்த்து மகிழ்ந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதனை வீடியோவாக எடுத்து சாந்தனு தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.நிறைய பேர் இருப்பினும் அகில உலக சூப்பர் ஸ்டார் மட்டும் இடத்தையே கலகலப்பாக வைத்துள்ளார்.இந்த வீடியோவில் சிவா செய்யும் காமெடியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சிரித்தே விழுந்துள்ளார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அனைவரும் வீடியோவில் தமிழ் சினிமா அணி வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த வீடியோவில் ரசிகர்கள் வீடியோ செம்ம ஜாலியாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சிவா காமெடி தான் வேறெலெவெல்,என ரசிகர்கள் சிவாவை பாராட்டி வருகின்றனர்.மேலும் இது எங்களை சிரிக்க வைத்த சிறந்த வீடியோ இதனை பதிவேற்றியதற்கு நன்றி எனவும் ரசிகர்கள் சாந்தனுக்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : with love santhanu kiki
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in