செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை FULL CONTROL எடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் :

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது .இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.இந்த போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடத்தப்படவில்லை.இந்நிலையில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.இந்த செஸ் போட்டி ஜூலை 28 ஆம் தேதி நேற்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டிகளில் பல வீரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொள்ள உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை FULL CONTROL எடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் : 1

விளம்பரம்

மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களை செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் அழைத்து வரப்பட உள்ளதால் பல மாவட்டங்களில் போட்டிகள் தொடங்கி மாணவர்கள் போட்டியை காண தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்த போட்டியை நேரில் காண்பதற்கு ஒரு நாளுக்கு இந்தியர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் வெளிநாட்டினருக்கு ரூ.6000 முதல் ரூ.8000 வரையும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.இந்த போட்டியில் பங்கேற்க 197 நாடுகளில் இருந்து முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பல மக்களும் ஆர்வமாக உள்ளனர்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை FULL CONTROL எடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் : 2

விளம்பரம்

நேற்று சென்னையில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின்,ரஜினிகாந்த் என பலரும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்காக ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்ட சிறப்பு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த நிகழ்ச்சியையும் இவர் தான் இயக்கியுள்ளார்.நிகழ்ச்சியின் நடுவே கையில் வாக்கி டாக்கியை வைத்து கருத்துக்களை கூறி பிறரை வழிநடத்துவதை வீடியோவில் காண முடிகிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை பின்னால் இருந்து இயக்கம் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளனர்

விளம்பரம்

Embed video credits : BBC NEWS | TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment