தமிழக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர்களுள் ஒருவர் தான் மு.க ஸ்டாலின் அவர்கள்! தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பணியில் அதீத ஆர்வம் காட்டி வந்து மக்களின் பலத்த ஆதரவை பெற்று வருகிறார்! எதிர்கட்சியினரே இவரை பார்த்து பொறாமை படும் அளவிற்கு சிறப்பான செயல்களையும் தமிழ்நாடும் நாடு மக்களும் முன்னேற செம்மையான திட்டங்களையும் வகுத்து வருகிறார் என்றால் அது மிகையாகாது! முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்து அலுவலக நேரத்தில் மட்டும் பணிபுரியாமல் எந்த நேரமும் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து முதன்மை மாநிலமாக மாற்ற அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார்!
இத்தனை சிறப்பாக பல திட்டங்கள், செயல்கள் செய்து கொண்டிருந்தாலும் உடலை மேம்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டுவது இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்! மக்களோடு மக்களாக கலந்து மக்களுக்காக பனி செய்து வரும்போதிலும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க காலை பொழுதில் சிறிது உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சொல்லாமல் சொல்லி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்! இப்பொழுது தினமும் அவர் தொடர் பணிகளிலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…
https://twitter.com/TRBRajaa/status/1472779794697711618
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in