நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோப்ரா.இப்படத்தினை செவென் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக கேஜிஎப் பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.3 வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் விக்ரம் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.
படத்தின் கதை
பணத்திற்காக உலக நாடுகளில் இருக்கும் முக்கிய நபர்களை கொலை செய்கிறார் விக்ரம்.இதனை சாதாரண கொலைகள் போல அல்லாமல் எவரும் கண்டறியாத அளவிற்கு கணக்கு போட்டு கொன்று வருகிறார்.இதனால் போலீஸ் இந்த கொலைகளை செய்வது யார் என்று கண்டறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த கொலைகளை செய்பவரை கண்டறிய ஸ்பெஷல் போலீசாக வருகிறார் இர்பான் பதான்.கொலை குற்றவாளியை கண்டறியமுடியாமல் தவிக்கும் இர்பானுக்கு உதவியாக மீனாட்சி வருகிறார்.இவர் கணக்கு மூலம் கொலை நடப்பதை கண்டறிகிறார்.இந்நிலையில் விக்ரம் செயல்பாடுகளை நடவடிக்கைகளை ஹேக்கர் தெரிவுபடுத்தவே சற்று பதட்டமடைகிறார் விக்ரம்.யார் இந்த ஹேக்கர்,அவரை எப்படி விக்ரம் எதிர்கொள்கிறார்,விக்ரமின் கொலைக்கான உண்மையான காரணங்கள் என்ன,அவரை போலீஸ் கண்டறிந்ததா என்பதே மீதி படத்தின் கதை
பட விமர்சனம்
வழக்கம் போல விக்ரம் அவரது நடிப்பில் அனைவரையும் மிரட்டியுள்ளார்.படம் முழுவதையும் தனது தோலில் சுமந்து சென்றுள்ளார்.படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டிக்கு இது சரியான கதாபாத்திரம் அல்ல என்பதை உணரவைக்கிறது முழு படமும்.மிர்னாலினி,மீனாட்சி இருவரும் தங்களது கதாபாத்திரத்தினை கட்சிதமாக நடித்துள்ளனர்.போலீசாக வரும் இர்பான் பதான் தன்னால் முடிந்த வரை மெனெக்கெடல் போட்டு நடித்து அசத்தியுள்ளார்.படத்தில் வில்லனாக வரும் ரோஷன் மேத்தாவை வில்லனாக ஏற்றுக்கொள்வது சற்று சங்கடமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர் அஜய் ஞானமுத்து எடுத்துக்கொண்ட கதை அற்புதம்,ஆனால் அதனை டெலிவரி செய்வதில் கோட்டை விட்டுவிட்டார்.படத்தின் நீளமே படத்திற்கு எதிரியாக அமைந்துள்ளது.நீளமாக இருந்தாலும் விறுவிறுப்பான காட்சிகளை எடுத்து மூன்று மணி நேரம் செல்வதே தெரியாமல் ஆகியிருந்தால் இப்படம் பெரும் ஹிட் அடித்திருக்கும்,தேவையற்ற பாடல்,காதல் போன்றவைகளால் படம் தொய்வை சந்திக்கிறது.இடைவேளை காட்சிகளில் அரங்கம் அதிர்ந்தது.வழக்கம் போல பின்னணி இசை மூலம் ரஹ்மான் அசத்தியுள்ளார்.மொத்தத்தில் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே ,விக்ரமுக்கு மூன்று வருடம் கழித்து திரைக்குவரும் படம் இது அல்ல என்பது மட்டும் மெய்.
கோப்ரா படத்திற்கு இந்தியன் டைம்ஸ் அளிக்கும் ரேட்டிங் – 2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in