இயக்குனர் சுந்தர் சி மக்களுக்கு எப்பொழுதும் கலகலப்பான படங்களை கொடுப்பதில் வல்லவர் ,அந்த வரிசையில் தற்போது பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் காபி வித் காதல் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.நடிகர் ஜெய் ,ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் டிடி,மாளவிகா,அம்ரிதா ஐயர்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா ,யோகிபாபு,ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
படத்தின் கதை
படத்தில் ஜெய்,ஜீவா,ஸ்ரீகாந்த் மற்றும் டிடி ஆகியோர் அண்ணன் தங்கைகள் ஆவார்கள்.இதில் ஜெய்யை நடிகை அம்ரிதா ஒருதலையாக காதலித்து வருகிறார்,ஆனால் ஜெய்க்கோ பெரிய ஹோட்டல் அதிபர் ஆக வேண்டும் என ஒரு இடத்தினை பார்க்க சென்று தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள உரிமையாளர் மகளை திருமணம் செய்ய ஓகே சொல்லிவிடுகிறார்.அமெரிக்காவில் இருக்கும் அந்த பெண்ணை பிக்கப் செய்ய ஜீவா செல்லவே இருவருக்குள்ளும் காதல் பிக்கப் ஆகிவிடுகிறது.இந்நிலையில் தனது தம்பி ஜெய் கனவிற்காக ஜீவா காதலித்த பெண்ணை பிரிந்து பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்க,அப்படி ஜீவாக்கு ஜோடியாக வருகிறவர் தான் ரைசா வில்சன்.ரைசா முன்னதாக மூத்த அண்ணண் ஸ்ரீகாந்த் உடன் தொடர்பில் இருந்தவர்.இதனால் ஏற்படும் குழப்பங்கள் ,இறுதியில் யார் யாரை திருமணம் செய்தார்கள் என்பதை நகைச்சுவையாக காட்டியுள்ளதே இப்படத்தின் மீதி கதை ஆகும்
படத்தின் விமர்சனம்
குழப்பமான கதையை கையில் எடுத்து அதனை மக்களுக்கு நகைச்சுவையாக கொடுக்க எண்ணி எடுத்துள்ள இப்படம் முடிவாக வேறு மாதிரியாக வந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லிய நிலையில் இப்படத்தில் காமெடிக்கு பெரும் பஞ்சம் ஆகிவிட்டது,வித்தியாசமாக கதையா கொடுக்கிறேன் என இறுதியாக ஆடியன்ஸை ஒன்றுமே புரியாதபடி குழப்பி விட்டார்.படத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு அருமை,தங்களது கதாபாத்திரத்தினை கட்சிதமாக நடித்து கொடுத்துள்ளனர்.இருப்பினும் கதையில் திருப்பங்கள் ,நகைச்சுவைகள்,சுவாரசியங்கள் இல்லாதது பெரும் குறையாக அமைந்துள்ளது .படத்தில் கலர்புல்லாக ஒளிப்பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது,அது மட்டும் தான் படத்தில் பாராட்டும் படி இருந்தது,யுவனின் இசையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் கிடைத்த கதையை எடுத்து,எடுத்த கதையை முடிந்தளவுக்கு கூறியுள்ளனர்
COFFEE WITH KADHAL படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 1.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in