விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.
இந்த வரம் கோமாளிகள் சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரங்களில் வந்து அசத்தியுள்ளனர்.தற்போது இந்த வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இதில் பாலா நடிகர் ரஜினிகாந்தின் அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் கதாபாத்திரத்தில் வந்து வழக்கம் போல் அனைவரையும் கலாய்த்து தள்ளியுள்ளார்.தீ பெட்டியை எந்த பக்கம் உரசினாலும் தீ புடிக்கும்,ஆனா நீ சூடு தண்ண வச்சாலே அடிபிடிக்கும் என வித்யூலேகாவை பங்கமாக கலாய்த்துள்ளார் பாலா.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Embed video credits : Vijaytelevision
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in