கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிபயங்கரமாக பரவி வருகிறது. போன வருடம் பாதித்ததை விட இந்த வருடம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் வட இந்தியா பக்கம் அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்கள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு தற்போது அரசாங்கமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அரசாங்கம் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் அணைத்து துறந்து இருக்கும். 12 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசாங்கம் எடுத்து வருகிறது. ஆனாலும் சிலர் அதை மீறி வெளியே சுற்றி திருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த கடினமான சூழ்நிலையிலும் மக்களின் நலன் காக்க அயராது உழைப்பது டாக்டர்கள் , செவிலியர்கள். இந்நிலையில் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று செவிலியர் தினத்தை முன்னிட்டு நர்ஸ்கள் அனைவரும் குக்கூ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in