காசு கொடுத்தா எங்க வேணா போய் ஆடுவியான்னு கேட்டாங்க..பேட்டியின் போது கலங்கிய பவித்ரா | Cook With Comali Pavi

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. வழக்கம் போல இந்த புது சீசனும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சீசன் 2ல் வந்து பிரபலமானவர் தான் பவித்ரா லட்சுமி.

காசு கொடுத்தா எங்க வேணா போய் ஆடுவியான்னு கேட்டாங்க..பேட்டியின் போது கலங்கிய பவித்ரா | Cook With Comali Pavi 1

விளம்பரம்

இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 2 அஸ்வினுடன் இவர் இணைந்து நடித்த குறும்படம் ட்ரெண்ட் ஆனது. அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா. என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் , இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் இணைந்து செய்த காதல் ட்ராக் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் பவித்ரா எலிமினேட் ஆன போது கூட ரசிகர்கள் இது தவறான முடிவு என விஜய் டீவியை திட்டி தீர்த்தனர். இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா. இந்நிலையில் தற்போது இவர் நடித்துள்ள ஏனென்றால் காதல் என்பேன் என்ற musical short film வெளியாகியுள்ளது. இதில் பவித்ராவுக்கு ஜோடியாக விஜய் தங்கையன் தான் இந்த short film ஐயும் இயக்கியுள்ளார்.

காசு கொடுத்தா எங்க வேணா போய் ஆடுவியான்னு கேட்டாங்க..பேட்டியின் போது கலங்கிய பவித்ரா | Cook With Comali Pavi 2

விளம்பரம்

தற்போது பவித்ரா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் ஆரம்பத்தில் மிக கஷ்டப்பட்டதாகவும், 10 பாடலுக்கு ஆடினால் தான் 500 ரூபாயாவது கிடைக்கும் என்று கூறியுள்ளார். என் தாயாருக்கு உடல்நிலை மிகுந்த மோசமாக இருந்தது. நான் நடித்த படத்தை அவர்கள் வந்து பார்த்து கை தட்டி மகிழ்ந்த நிகழ்வு என் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறினார். அந்த விடியோவை நீங்களும் காண

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment