The Indian Times

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை? அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் வல்லுநர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிரது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் மேல் மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 17 கோடிக்கு மேல் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்னதான் அரசாங்கம் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தினாலும், ஊரடங்கு அறிவித்தாலும் மக்கள் அதை சரியாக கடைபிடிப்பதில்லை. இந்தியளவில் மட்டுமல்ல உலகளவில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்தியாவில் தான் இந்த இரண்டாவது அலை அதிபயங்கரமான பரவி வருகிறது.

Advertisement

கொரோனாவை கட்டுப்படுத்தமுடுயாமல் உலகமே திண்டாடிவரும் இந்த சூழ்நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவுவதற்காண அறிகுறிகள் இருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனாவில் தாக்கம் பிரிட்டனில் அதிகமாக காணப்படுகிறது, இது தொடர்ந்தால் கொரோனாவின் மூன்றாவது அலை பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா கூறியுள்ளார்.

தற்போது வரை உலகம் முழுவதும் இந்த கொரோனாவின் இரண்டாவது அலையவே கட்டுப்படுத்தமுடியாமல் கதறி கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது அலை பரவினால் உலகிற்கே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in