The Indian Times

கொரோனா சீனாவில் இருந்து தான் பரவப்பட்டது! இங்கிலாந்து புலனாய்வு அதிகாரிகள் சேகரித்த ஆதாரம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தோற்று சீனாவில் இருந்து தான் பரவப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து புலனாய்வு அதிகாரிகள் ஆதாரத்தை சேகரித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிரது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் மேல் மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னதான் அரசாங்கம் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தினாலும், ஊரடங்கு அறிவித்தாலும் மக்கள் அதை சரியாக கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் சீனாவில் இருந்து தான் பரவியது கொரோனா என்று இதுவரை நிரூபணம் ஆகாத நிலையில் இங்கிலாந்து ஆதாரத்தோடு கூறியுள்ளது.

Advertisement

உலக சுகாதார துரையின் மூலம் சீனாவின் ஹுஹான் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஹுஹான் நகரின் மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவப்பட்டது , வவ்வால் மூலமாக தான் கொரோனா தோற்று பரப்பப்பட்டது, இது திட்டமிட்டு சீனாவில் உருவாக்கப்பட்டு புறப்பட்ட வைரஸ் என்று பல தரப்பில் ஆரம்பகாலங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த வைரஸ் சீனாவின் பயோலஜிக்கல் ஆய்வகத்தில் இருந்து தான் பரவ வாய்ப்பு உள்ளது என்று ஆதாரத்தை சேகரித்துள்ளனர் இங்கிலாந்து புலனாய்வு நிபுணர்கள். இந்த நிலை தொடர்ந்தால் உலகமே மிகப்பெரிய பேரழிவை சந்திக்க கூடும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை, இதனால் முழுமையான புலனாய்வு மேற்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in