The Indian Times

நெட்டிசன்களிடம் சிக்கிய சிஎஸ்கே அணி – வச்சி செய்ய போறாங்க

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான வீரர்கள் பட்டியலை கேட்டு பிசிசிஐ 20 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருந்தது. கடந்த ஆண்டு கொரோன தொற்று காரணமாக அரபு நாட்டில் ஐபில் தொடர் நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ கேட்டிருந்த பட்டியல் அடிபடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், மோனு சிங் ஆகிய வீரர்களை வெளியேற்றி, மற்ற வீரர்களை வைத்துக் கொண்டது.

சி எஸ் கே அணியில் வாட்சன் ஓய்வு அறிவித்த நிலையில் உத்தப்பாவை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளது சி எஸ் கே நிர்வாகம். அவரே ஓபன் பேட்ஸ்மேன் என்று கூறுகிறது. ஏற்கனவே வயதான வீரர்கள் உள்ள அணி என்று கேலி செய்து வரப்பட்டது. இந்த நிலையில் உத்தப்பா வருகையில் என்ன ஆக போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொடரில் இளம் வீரர்கள் சி எஸ் கே வில் இடம்பெறுவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த செய்தி மூலம் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in