விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது புதிய போட்டோஷூட் காக சேலையில் வந்து அசத்தியுள்ளார் சிவாங்கி.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் சிவாங்கி எப்போ கதாநாயகியாக நடிக்க போறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும் சிலர் சேலையில் விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போலவே இருக்கீங்க என கூறி கருத்து தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.இத்தனை நாள் மாடர்ன் உடையில் பார்த்த சிவங்கியை சேலையில் தற்போது பார்க்கும் பொழுது சில மாற்றங்கள் தெரியத்தான் செய்கிறது.உண்மையிலேயே மிகவும் அழகாக உள்ளார் சிவாங்கி.இந்த வீடியோவில் கியூட் ஆக சிரித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார்.
Embed video credits : sivaangi krishnakumar
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in