பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் டாடா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே காணலாம்
படத்தின் கதை
கல்லூரியில் படித்து வரும் கவினும் அபர்ணா தாஸும் காதலித்து வருகின்றனர்.இந்நிலையில் கல்யாணத்திற்கு முன்பே அபர்ணா தாஸ் கர்ப்பம் ஆகிறார். இதுகுறித்து அபர்ணா வீட்டிற்கு தெரிய வரவே இருவீட்டின் எதிர்ப்பை மீறி இருவரும் கல்யாணம் செய்துகொண்டு வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர்.இருவரும் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் அடிக்கடி இருவருக்கும் சண்டைகள் ஏற்பட்டு வரும்,அதன்படி ஒருநாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அபர்ணாவிடம் சண்டையிட்டு கவின் வேலைக்கு செல்கிறார்,அந்த சமயம் அபர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்படவே,கவினுக்கு போன் செய்கிறார் ஆனால் கோவத்தில் கவின் போனை எடுக்காததால் மயங்கி விழுகிறார் அபர்ணா தாஸ்.அச்சமயம் வீட்டிற்கு வரும் பெண் ஒருவர் அபர்ணாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.அங்கு அபர்ணா ஆண் குழந்தையும் பெற்றெடுக்கிறார்,பின்னர் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு பெற்றோர்களுடன் செல்கிறார் அபர்ணா.இதனால் மருத்துவமனையில் வந்து பார்க்கும் கவின் அபர்ணா மீது கோவமடைகிறார்.குழந்தையை ஆசிரமத்தில் அனுமதிக்க போகும் கவின்,இது தனது குழந்தை தான் வளர்க்க வேண்டும் என பல போராட்டங்களுக்கு தாய் இல்லாமல் குழந்தையை வளர்த்து அவரையும் பள்ளியில் சேர்க்கிறார்.பின்னர் கவின் பெரிய கம்பெனி ஒன்றில் வேளைக்கு சேருகிறார்,அங்கு தான் அபர்ணா தாஸும் வேலை செய்கிறார், அபர்ணாவை பார்த்த கவின் என்ன செய்தார்? அபர்ணா ஏன் குழந்தையை விட்டுவிட்டு சென்றார்,இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
கதாநாயகனாக வரும் கவின் தனது நடிப்பினால் தொடர்ந்து ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்,இதுவரை தான் அழுததே இல்லை என்று கூறிக்கொண்டு வரும் கவின் முதல்முறையாக மகனுக்காக அழும் பொழுது நம்மையும் அழவைக்கிறார்.கதாநாயகியாக வரும் அபர்ணா தாஸ் மிகச்சிறப்பாக கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து அசத்தியுள்ளார்.கவின் நண்பனாக வரும் ஹரிஷ் நம் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நண்பனை போல பிரதிபலிப்பது ரசிகர்களிடம் கதையை ஒன்றிணைத்துள்ளது.படத்தில் நடித்துள்ள பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் அவ்வளவு ஆழம் இல்லை.கவினின் மகனாக நடிக்கும் இளன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம் செய்பவர்கள் எந்த துயரத்தினை அனுபவிக்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியுள்ளார்.படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் வேகமாக நகர்ந்தாலும் இரண்டாவது பாதி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை கூடுதல் பலத்தினை படத்திற்கு அளித்துள்ளது.மொத்தத்தில் இப்படம் குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம்
டாடா படத்திற்கு இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.5/ 5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in