கலா மாஸ்டர் ஒரு நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் ஆவார் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடன கலைஞராக பணியாற்றியுள்ளார். அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி டான்ஸ் ஷோவான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மேலும் பிரபலம் ஆனார், அங்கு அவர் மூன்று நடுவர்களில் ஒருவர். கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நாட்டுப்புற நடனக் காட்சிகளுக்காக 2000 ஆம் ஆண்டில் சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது.
கிளாசிக்கல் நடனக் கலைஞரான கலா, 1982 ஆம் ஆண்டு தனது 12வது வயதில் உதவி நடன இயக்குனராக அறிமுகமானார். புது புது அர்த்தங்கள் (1989) திரைப்படத்தின் முன்னணி நடன இயக்குனராக பாலசந்தரால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானியம் உட்பட பல்வேறு மொழிகளில் 4000 பாடல்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
இவர் தற்போது ஒரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அப்போது அவரிடம் அவருடைய தாயார் மற்றும் மகன் புகைப்படம் காட்டப்பட்டது. தாயாரை பற்றி நெகிழ்ச்சியாக பேசினார். அடுத்ததாக அவருடைய மகன் பேசும் வீடியோ காட்டப்பட்டது. அதில் அவர் தன் தாயாருக்காக “கண்ணான கண்ணே” பாடலை பாடினார். அதை கேட்டு கலா கண்ணீர் வடித்தார். அந்த அரங்கமே சோகத்தில் மூழ்கியது. சோகமான அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
https://youtu.be/pG–8K2CETQ?t=420
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in