மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.மாடலிங் துறையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் வாய்ப்பு தேடி வந்தார் .தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார்.
இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை.
பின்னர் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.ரீல்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தர்ஷா.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.
இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் அறிமுகம் ஆகினார் .இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்
தர்ஷா குப்தா தற்போது சாகுந்தலம் பட சமந்தா போல அப்படியே மேக்கப் செய்து புகைப்படம் எடுத்து புகைப்படங்களை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தர்ஷாவா இல்லை சமந்தாவா என்ற அளவுக்கு குழம்பி போயுள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ரசிகர்கள் இவரின் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
சமந்தா போல முழுமையாக மாற தர்ஷா எடுத்துக்கொண்ட மெனெக்கெடல்களை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in