தசரா – திரை விமர்சனம்(?/5)

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை இப்படத்திற்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்.

தசரா - திரை விமர்சனம்(?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை..

நிலக்கரியை மட்டும் வைத்து பிழைப்பை நடத்தி வரும் 160 பேர் வசிக்கும் ஒரு கிராமத்தில் நிலக்கரியை திருடி தனது உயிர் நண்பனுடன் நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார் நாணி.அப்படி நண்பனுக்காக எல்லாத்தையும் செய்யும் நானி தான் காதலிக்கும் பெண் ஆன கீர்த்தி சுரேஷ் மீது ஆசைப்படுவதை தெரிந்தும் அவரையும் விட்டுக்கொடுத்து விடுகிறார்.கல்யாணம் வரைக்கும் வந்த நண்பனின் திருமண இரவின் பொழுது இந்த விஷயம் தெரிந்து நானியை பார்க்க நண்பன் வரும் பொழுது நாணி கண் முன்னே அவரை கூலிப்படை கொன்று விடுகின்றனர்.நானியின் நண்பனை கொன்றது யார் எதற்காக என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்

தசரா - திரை விமர்சனம்(?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

நடிகர் நானி இப்படத்தினை தனி மனிதனாக மொத்தமாக தாங்கியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.இதுவரை கல்லூரி பையன் போல திரையில் தோன்றிய நாணி முதல் முறையாக ரவுடி கதாபாத்திரம் போல முரட்டுத்தனமாக மாறியுள்ளார்.குடியால் நடக்கும் அரசியலை அப்படியே காண்பித்துள்ளார் இயக்குனர்.படம் எந்த தொய்வும் இல்லாமல் வேகமாக நகர்ந்து செல்வது ரசிக்கும்படி அமைந்துள்ளது.கிளைமாக்ஸ் காட்சிகளில் நானி பலரையும் அடிக்கும் சண்டை காட்சிகள் நம்ப முடியாததாக அமைந்தாலும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.படத்தின் பாடல்கள் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும் பின்னணி இசை பட்டையை கிளப்பியுள்ளது.கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா காதாபாத்திரமாகவே மாறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.படம் வேகமாக நகர்ந்தாலும் சில தொய்வுகள் சரி செய்திருக்கலாம் என்பது போல உணர்வு ஏற்படுவது மட்டுமே படத்தின் மைனஸ் பாயிண்ட் ஆகும்.

தசரா படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment