“ராஜுவோட சேர்ந்து பிரியங்கா FUN பண்ணுறா!” பிரியங்காவையே குறிவைத்து தாக்கும் நிரூப்! Bigg Boss Promo 3

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 85 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்! அவ்வாறு மக்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருப்பவர்களை சண்டை போடும் நேரத்தில் ரசித்து பார்த்தாலும், நியாயமாக விளையாடும் ஒருவரையே இறுதியில் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்! வித விதமாக சண்டை போடும் தாமரை, மாறி மாறி பேசும் பாவனி, பேசியே கொல்லும் பிரியங்கா, அசராமல் விளையாடும் ராஜு, சிபி, என இப்படி சொல்லி கொண்டே போகலாம்! அதுமட்டுமில்லாமல் மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்ததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

"ராஜுவோட சேர்ந்து பிரியங்கா FUN பண்ணுறா!" பிரியங்காவையே குறிவைத்து தாக்கும் நிரூப்! Bigg Boss Promo 3 1

விளம்பரம்

போன போட்டியாளரே வந்துவிட்டால் என்ன செய்ய என்று மக்கள் சலித்துக்கொண்ட நேரம் தான் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக முதலில் விஜய் டிவியில் பிரபல நடன இயக்குனராக விளங்கும் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகர் மற்றும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வீட்டிற்குள் புது வரவாக வந்தனர். அபிஷேக் மக்களால் மீண்டும் வெளியேற்றப்பட்டவுடன் ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்க அடுத்தடுத்த வாரங்களில் இமான் அண்ணாச்சி மற்றும் அபிநய் வெளியேறியுள்ளனர்! இப்பொழுது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதால் டபுள் எவிக்க்ஷன் நடந்தது! அதில் அக்க்ஷரா மற்றும் வருண் வெளியேற்றப்பட்டனர்! வேடிக்கையாக செல்லும் பிக் பாஸ் வீட்டில் இன்னும் எத்தனை சண்டைகள் வரப்போகிறது என்று நாம் பொருத்து இருந்து தான் காண வேண்டும்! விறுவிறுப்பாக செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது! அதை தற்பொழுது நீங்களும் கண்டு மகிழுங்கள்! Watch The Video Below!…

Bigg Boss Tamil Season 5  | 30th December 2021 - Promo 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment