நம் ஊரில் நடக்கும் திருட்டுகள் பலவிதம். நூதன முறையில் திருடி பிழைக்கும் பல கும்பல்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த இணைய உலகில் திருட்டு கும்பல்களின் ஆதிக்கம் அளப்பரியது. அரை குறை தமிழில் வடநாட்டு நபர்கள் “கார்டு மேல இருக்கே 16 நம்பர் சொல்லுங்கோ” என்று மொபைல் வழியாக திருடுபவர்களும், முகநூல் மெசஞ்சரில் வந்து உங்களிடம் ஒரு 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தால் கொடுங்கள் இரவுக்குள் திருப்பி தந்து விடுகிறேன் ஃபேக் ஐடி மூலம் திருடும் ஆட்களும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றனர். இதெல்லாம் இப்படி என்றால் தற்போது நடந்துள்ள சம்பவம் வேறு மாதிரி.
அரசு பேருந்து டிரைவர் ஒருவரே இரவு நேரம் பணிமனையில் பேருந்தை நிறுத்திவிட்டு தினமும் 10 லிட்டர் டீசல் திருடி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் இருந்து டீசல் காணாமல் போவதாக புகார் வந்தது. இதையடுத்து ஒரு நாள் இரவு நேரத்தில் அதிகாரிகள் திடீர் சொதனை மேற்கொண்டனர். அப்போது அரசு பேருந்து டிரைவர் ஒருவர் தண்ணீர் கேன், டியூப்புடன் பேருந்தில் ஏதோ செய்து கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்த போது அவர் சிறிய குழாய் போட்டு பேருந்தில் இருந்து டீசல் திருடி கொண்டிருந்தது தெரிய வந்தது. Youtube Video Code Embed Credits: Coimbatore Times
அங்கேயே அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்தனர். சில மாதங்களாகவே இரவு செல்லும் முன்பு 20 லிட்டர் டீசலை இவர் திருடி வந்தது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் இவரை சரமாரியாக கேள்வி கேட்டனர். மேலும் இவரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.
அரசு வேலையில் மாதம் மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு அரசு பேருந்தில் திருட்டிலும் ஈடுபட்ட இவர் போன்ற ஆட்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in