கனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் அருண் ராஜா காமராஜ்.பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவை அசத்தி வருகிறார்.இவரது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன்.இருவரும் கல்லூரியில் இணைந்து படித்து தற்போது இணைந்தே பணியாற்றி வருகின்றனர்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து அருண் ராஜா நெஞ்சுக்கு நீதி என்ற படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்திற்கு போனி கபூர் தயாரித்துள்ளார்.மே 20 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் .
அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து கொரோனா காரணமாக உயிரிழந்தார்.இந்நிலையில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்,அருண் இழக்க கூடாத ஒன்றை இழந்துவிட்டார்,சிந்துவின் ஆதரவு இவருக்கு எப்பவும் இருக்கும் என கூறினார்.இதனால் அருண் ராஜா காமராஜ் மேடையிலேயே கதறி அழுதார்.உடனிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதினை வெகுவாக வேதனைப்பட வைத்தது.ரசிகர்கள் அருண் ராஜாவுக்கு கமெண்டில் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : behindwoods
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in