17 வருட காதல் வாழ்க்கையை முறித்த பாலா..மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்

தமிழ் திரையுலகில் சிலர் மட்டுமே சமூக அக்கறை சார்ந்த படங்களை எடுப்பது உண்டு. வெறும் பொழுதுபோக்கு மட்டுமே திரைப்படங்கள் இல்லை, அதைத்தாண்டிய சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ள இயக்குனர்களும் தமிழ்திரை உலகில் இருக்கவே செய்கின்றனர் அந்த வகையில் உள்ள ஒருவர் தான் பாலா. இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நந்தா,பிதாமகன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் அதர்வாவை வைத்து இயக்கிய பரதேசி படம் வேற லெவல் ஹிட் அடித்தது. Youtube Video Code Embed Credits: Cineulagam

கட்டாயம் படிக்கவும்  காதலர் தின படத்தின் கதாநாயகி சோனாலியின் சமீபத்திய புகைப்படங்கள்

17 வருட காதல் வாழ்க்கையை முறித்த பாலா..மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் 1
இவருக்கும் இவரது மனைவி முத்துமலருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சட்டபூர்வமாக பிரிந்துள்ளனர். இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிலநாட்காளகவே திரையுலகில் பல விவாகரத்துகள் நடைபெற்று வருகிறது. சமந்தா-நாகசைதன்யா, டி.இமான், தனுஷ்-ஐஸ்வர்யா முறிவு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பாலாவும் இணைந்துள்ளார்.. Watch the Below Video..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  திருமணத்தின் பொழுது நடிகை கயல் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment