Watch the below Video சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ள இயக்குனர்களும் தமிழ்திரை உலகில் இருக்கவே செய்கின்றனர் அந்த வகையில் உள்ள ஒருவர் தான் பாலா. இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நந்தா,பிதாமகன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் அதர்வாவை வைத்து இயக்கிய பரதேசி படம் வேற லெவல் ஹிட் அடித்தது. Youtube Video Code Embed Credits: Kolly infos
இவருக்கும் இவரது மனைவி முத்துமலருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சட்டபூர்வமாக பிரிந்துள்ளனர். இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிலநாட்காளகவே திரையுலகில் பல விவாகரத்துகள் நடைபெற்று வருகிறது. சமந்தா-நாகசைதன்யா, டி.இமான், தனுஷ்-ஐஸ்வர்யா முறிவு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பாலாவும் இணைந்துள்ளார்.
தற்போது இவரும் இவரது மகளும் சந்தித்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகளின் திருமணத்திற்கு பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் மற்றும் அவரது மகள் ஆகியோர் வந்து இருந்தனர். இருவரும் தனித்தனியாக அமர்ந்து இருந்த நிலையில் பாலாவின் பெண் அவர் இருந்த இடத்தை தேடி வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டார். இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ செய்துள்ளது. பெற்றோர்களின் பிடிவாதத்தால் பாதிக்கப்படுவது என்னவோ குழந்தைகள் தான். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in