நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.
இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.அண்மையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல பொன்னியின் செல்வன் படத்திலும் சிறிய பழுவேட்டயராயர் ஆக நடித்து அசத்தி இருப்பார் பார்த்திபன்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூபில் செய்திகள் வந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன் நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! என குறிப்பிட்டுள்ளார்.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in