கிணற்றில் விழுந்த குட்டி யானை – மீட்கும்போது மீண்டும் கிணற்றில் விழுந்தது

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்குள் வந்தது, அப்போது தண்ணீர் குடிப்பதற்காக ஏலகுண்டூர் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நெருங்கியபோது தவறி விழுந்தது. தவறி விழுந்த குட்டியானை 16 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மீட்புப் பணியின் போது யானைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

கிணற்றில் விழுந்த குட்டி யானை - மீட்கும்போது மீண்டும் கிணற்றில் விழுந்தது 1

விளம்பரம்

யானை கிணற்றில் விழுந்தத தகவலறிந்து காலை 4.30 மணிக்கு 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தி கிணற்றில் இறங்கி யானையை கட்டி கிரேன் மூலம் கழுத்து மற்றும் கால்களில் கயிறு கட்டி கிரேன் மூலம் மேலே தூக்கினர். யானை 30 அடி குறுகிய இடத்தை வந்தபோது கயிறு நழுவி பக்கவாட்டில் விழுந்தது. இதையடுத்து நான்கு கால்களிலும் கயிற்றை கட்டி கிரேன் மூலமாக மேலே இழுத்த பாதுகாப்பாக மீட்டனர். வீடியோவை கீழே பாருங்க.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment