துணிந்து அடிக்கும் நடிகர் JAI-ன் எண்ணித்துணிக TRAILER

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் ஜெய். பகவதி படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை அளித்தது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து தனது மிரட்டலான நடிப்பினை காட்டி பகவதி படத்தில் குணவாக நடித்த பையனா இப்படி நடித்துள்ளான் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல வரவேற்பினை பெற்றார்.ஹீரோவாக நடித்த முதல் படமே இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

துணிந்து அடிக்கும் நடிகர் JAI-ன் எண்ணித்துணிக TRAILER 1

விளம்பரம்

அதேபோல் இவர் இரண்டாவதாக நடித்த சென்னை 600028 படத்திலும் நடிப்பில் அசத்தியிருந்தார்.இந்த படத்தினை பார்த்து ஜெய் கதாபாத்திரம் பிடித்துப்போகவே இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க இவரை அழைத்தார்.பல நல்ல படங்களை தமிழில் கொடுத்துள்ளார் நடிகர் ஜெய்.பல நல்ல படங்களில் நடித்தாலும் இவருக்கான வரவேற்பு தற்போது குறைவாகவே கிடைத்து வருகிறது.இதனால் கடுமையாக போராடி மீண்டும் பழைய இடத்திற்கு வர முயற்சி செய்து வருகிறார் ஜெய்.இவர் கடின உழைப்பிற்கு மீண்டும் இவர் வெற்றிபெற்று முன்னணி கதாநாயகன் இடத்திற்கு வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

துணிந்து அடிக்கும் நடிகர் JAI-ன் எண்ணித்துணிக TRAILER 2

விளம்பரம்

தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் எண்ணித்துணிக படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் எதார்த்தமான இளைஞனாக நடித்து எதிரிகளை பந்தாடியுள்ளார் ஜெய்.ட்ரைலர் படத்தின் ஆவலை சற்று ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இவர் நடித்த பல படங்கள் சத்தமே இல்லாமல் வந்து பெரும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இப்படம் இவருக்கு வெற்றியை பெற்றுத்தரும் என பெரும் நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment