தீ விபத்தில் உயிரிழந்த பெற்றோர்கள் குறித்து நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியிட்ட பிரபல சன் டிவி தொகுப்பாளர் விஜய சாரதி

90களில் சன் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜய சாரதி.இவரை தெரியாத 90ஸ் கிட்ஸ்கள் தற்போது வரை இருக்கவே முடியாது.அந்த அளவிற்கு பிரபலமாகியவர்.நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிக பிரபலமடைந்தவர் விஜய சாரதி.பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள மக்களை பேட்டி எடுத்து அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பு செய்வார்.மேலும் இவர் மறைந்த பழைய நடிகர் சசிகுமாரின் மகனும் ஆவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

தீ விபத்தில் உயிரிழந்த பெற்றோர்கள் குறித்து நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியிட்ட பிரபல சன் டிவி தொகுப்பாளர் விஜய சாரதி 1

விளம்பரம்

பின்னர் பிரபலமாகிய இவருக்கு படங்கள் மற்றும் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் சரியாக பயன்படுத்தி கிடைக்கும் வேடங்களில் நடிக்க தொடங்கினார்.பின்னர் சினிமாவில் இருந்து நீண்ட ஓய்வை எடுத்துக்கொண்டார்.பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார்.இவர் தனது யூடியூப் சேனலில் தன்னை பற்றி தெரியதாக தகவல் ஒன்றை வெளியிட்டு அனைவரது இதயத்தினையும் கரைத்துள்ளார்.இதுவரை சிரித்துக்கொண்டே பார்த்த விஜய சாரதி முதல் முறையாக கலங்கி பார்ப்பது கவலை அளிக்கிறது.

தீ விபத்தில் உயிரிழந்த பெற்றோர்கள் குறித்து நெஞ்சை உலுக்கும் வீடியோ வெளியிட்ட பிரபல சன் டிவி தொகுப்பாளர் விஜய சாரதி 2

விளம்பரம்

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,என்னுடைய அப்பா மற்றும் அம்மா ஆகஸ்ட் 21 ஆம் தேதி வீட்டில் நடந்த தீ விபத்தில் இறந்துவிட்டார்கள்,நான் என் அக்காவும் அப்போது சின்ன பிள்ளைகள்,பாட்டி தான் எங்களை வளர்த்தார்கள்,பல வருடங்களுக்கு பிறகு தான் அப்பாவும்,அம்மாவும் இறந்ததை உணர்ந்தேன்.ஆனால் சோசியல் மீடியாவில் எனது அப்பா அம்மா இறப்பு குறித்து உங்களுக்கு தோன்றுவதை எழுதுவது வருத்தமாக உள்ளதாக,இந்த மாதிரி எழுதாதீர்கள் இதனை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது.உங்களது சேனல் பிரபலமடைய பிறரின் உணர்வில் விளையாடாதீர்கள் என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை காண்பவர்கள் நெஞ்சை உலுக்குவது போல் விஜயசாரதி வாழ்க்கை அமைந்துள்ளது.முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed video credits : Neengal Kaetta Channel #TravelwithVJ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment