முன்னாள் காதலனுக்காக மாப்பிள்ளையிடம் அனுமதி கேட்ட மணப்பெண் – வைரல் வீடியோ

விளம்பரம்

திருமண விழா என்றால் அதில் பல சுவாரஸ்யமான விஷயம் நடப்பது வழக்கம் தான். அது பலரை சந்தோஷம் அடைய செய்யலாம் அல்லது வருத்தம் அடையும்படி செய்யலாம். அப்படி சற்று வருத்தம் கலந்த சந்தோஷமான நிக‌ழ்ச்சி ஒன்று இந்த திருமண நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் செய்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.

இந்தோனிசியாவில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மணமகளின் முன்னாள் காதலர் வந்து இருந்தார். அங்கு அவர் மணமக்களை வாழ்த்தும் எண்ணத்துடன் தான் அந்த திருமண விழாவில் பங்கேற்றார். திருமண‌ம் முடிந்த பிறகு அவர் மணமக்களை வாழ்த்த மணமேடை சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு நடந்ததே வேறு.

விளம்பரம்

முன்னாள் காதலனுக்காக மாப்பிள்ளையிடம் அனுமதி கேட்ட மணப்பெண் - வைரல் வீடியோ 1

மணமேடை சென்ற முன்னாள் காதலர் தன் காதலியை பார்த்து கை கொடுக்க முற்பட்ட போது மணமகள் அதை மறுத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து அவர் தன் கணவரிடம் காதில் சென்று அவர் என் முன்னாள் காதலர் அவரை நான் ஒரு முறை கட்டி பிடிக்க அனுமதி தருவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த கணவர் உடனே அனுமதியும் அளித்துள்ளார்.

விளம்பரம்

இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல விதமான நல்ல கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. சிலர் கணவரிடம் அனுமதி பெற்று செய்ததால் தவறு இல்லை என்று கூறுகின்றனர்.
ஒரு சிலர் முன்னாள் காதலர் இடத்தில் அரோக்யமான முறையில் பேச்சு வார்த்தை வைத்து கொள்வது தப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment