மலையாள சினிமாவில் துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கியவர் ஐஸ்வர்யா லட்சுமி.2017ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியாகிய மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மலையாளத்தில் நடித்தார்.இருப்பினும் இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியையோ பெயரையோ கொடுக்கவில்லை.இந்நிலையில் தமிழில் விஷால் நடிப்பில் வெளியாகிய ஆக்சன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
தமிழ் சினிமாவில் இரண்டாவது படமே தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் அமைந்தது.இப்படத்தில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஐஸ்வர்யா லட்சுமி.அண்மையில் இவர் பூங்குழலியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி எடுத்திருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவருக்கு வெளியாகிய கட்டா குஸ்தி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.
இந்நிலையில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.அதில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ஹார்ட் குறியீடை தெரிவித்துள்ளார்.இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது அல்லது புதிய படத்திற்கு இருவரும் ப்ரோமோஷன் செய்கிறார்களா என்பது தெரியவில்லை என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.விரைவில் அவ்வாறு இருந்தால் அவர்களே அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in