ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பெண்களின் கனவு கண்ணனாகவும் , சாக்லட் பாயாகவும் வளம் வந்த நடிகர் மாதவன். இவரது புகைப்படத்தை வீட்டிலோ அல்லது ஹாஸ்டலிலோ ஒட்டி வைக்காத பெண்களே இருக்க மாட்டாரகள். அந்தளவிற்கு ஸ்டைலான மற்றும் ஹேண்டசமான நடிகர் மாதவன். இவரை மாதவன் என்று அழைப்பதை விட அதிகம் பேர் மேடி என்று தன் செல்லமாக அழைப்பார்கள்.
இறுதியாக இவர் நடித்த விக்ரம் வேதா , இறுதிச்சுற்று போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த அனைத்து படங்களிலுமே இவரை தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் அந்தளவிற்கு நடித்து தரமுடியாது. அப்படி பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து தான் மாதவன் நடிப்பார். இவர் தமிழில் மட்டுமல்ல , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி என்ற விஞ்ஞான ரீதியான படத்தை நடித்து இயக்கியுள்ளார். அந்த படத்தின் ட்ரைலர் 4 மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு பெண் , எனக்கு 18 வயது ஆகிறது , உங்களை நான் திருமணம் செய்து கொண்டாலே அது தவறா என்று கேட்டார். அதற்கு மாதவன் god bless you , என்னை விட சிறந்த கணவர் உங்களுக்கு கிடைப்பார் என்று சரியான பதிலை கொடுத்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in