47 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி, அசால்ட்டாக திருடிய பெண் ஊழியர் காட்டி கொடுத்த CCTV

பொதுவாக நகைக்கடைகளில் திருட்டு நடப்பது சகஜம்தான். கடைகளில் என்னதான் பாதுகாப்பு அம்சங்களும், வாட்ச்மேன்கள் இருந்தாலும் பூட்டை உடைத்து அல்லது ஏறிக்குதித்து நகையை திருடுவது திருடன்களுக்கு கை வந்த கலை. ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. கடையில் வேலை பார்க்கும் பெண் ஒருவரே 47 சவரன் நகையை அசால்ட்டாக ஆட்டையை போட்டுள்ளார். 23 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அந்த பெண் எப்படி களவாடினார் என்பதை அறிய கீழே உள்ள செய்தியை படியுங்கள் மற்றும் வீடியோவை பாருங்கள்.. Watch the below video

47 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி, அசால்ட்டாக திருடிய பெண் ஊழியர் காட்டி கொடுத்த CCTV 1

விளம்பரம்

திருநெல்வேலி வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் திருநெல்வேலி பகுதியில் திருமலை ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். சில நாட்களாக ராமச்சந்திரனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் அவர் கடைக்கு வருவதை நிறுத்திவிட்டார். திடீரென ஒரு நாள் கடைக்கு வந்து ஆய்வு செய்தபோது நகைகளின் எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கடையில் வேலை பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் சிசிடிவிகளை பொருத்தியுள்ளார்.

47 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி, அசால்ட்டாக திருடிய பெண் ஊழியர் காட்டி கொடுத்த CCTV 2

விளம்பரம்

அப்போது கடையில் வேலை பார்த்து வந்த சுபா என்ற பெண் யாருக்கும் தெரியாமல் தனது போன் கேஸில் நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது. அதன்படி அவர் 47 சவரன் தங்க நகைகளையும், 4 கிலோ வெள்ளி நகைகளையும் திருடியுள்ளார். இதன் மதிப்பு மட்டும் 23 லட்சம் ஆகும். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் போலீசில் தகவல் தெரிவிக்கவே அவரை தேடிச் சென்ற போலீசார் ஒரே நாளில் அனைத்து நகைகளையும் மீட்டு கொடுத்துள்ளனர். மேலும் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த சிசிடிவி காட்சிகளை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment