ஹிந்தியில் கோலமாவு கோகிலா ஆன நடிகை ஸ்ரீதேவி மகள் :GOOD LUCK JERRY TRAILER

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஹிந்தியில் கோலமாவு கோகிலா ஆன நடிகை ஸ்ரீதேவி மகள் :GOOD LUCK JERRY TRAILER 1

விளம்பரம்

இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.அனிருத் இசையில் உருவாகிய இப்படத்தில் பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்று கலக்கியது.தற்போது இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.ஹிந்தியில் இப்படத்தில் யார் நடிக்க வைப்பது என்று யோசித்து வந்த நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைத்தனர்.ஹிந்தியில் இப்படத்திற்கு குட் லக் ஜெரி என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தினை இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ளார்.

ஹிந்தியில் கோலமாவு கோகிலா ஆன நடிகை ஸ்ரீதேவி மகள் :GOOD LUCK JERRY TRAILER 2

விளம்பரம்

;ஹிந்தியில் உருவாகும் இப்படத்தினை மஹாவீர் ஜெயின் பிலிம்ஸ்,லைக்கா புரொடக்ஷன்ஸ், கலர் எல்லோ புரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயிர்த்துள்ளனர்.இப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இது ஜான்வி கபூர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் 3 வது படம் ஆகும்.இதற்கு முன்னர் இவர் நடிப்பில் உருவாகிய கோஸ்ட் ஸ்டோரீஸ் ,குஞ்சன் சக்சனா ஆகிய படங்கள் நேரிடையாக ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்

Embed video credits : disney plus hotstar

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment