பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக்.
முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இருவரும் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது மஞ்சிமா மோகனுடன் கவுதம் கார்த்திக் நெருங்கி எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தங்களது காதலை இருவரும் உறுதி செய்தனர்.தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தகவல் வெளியாகுயுள்ளது மேலும் வரவேற்பு கொச்சியில் நடைபெற உள்ளது.இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை கவுதம் மற்றும் மஞ்சிமா மோகனிடம் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இருவரும் கல்யாண அறிவிப்பினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in