வண்டியை ஒழுங்காக ஓட்டி வந்தாலே, வண்டியை நிறுத்தி லைசன்ஸ் எடு, ஆர்சி புக் எடு, ஹெல்மெட்டை போடு என்று ரோட்டின் மூலை முடக்குகளில் நின்று கல்லா கட்டுவது போலீசாரின் வாடிக்கையாகிவிட்டது. தற்போது கொரோனா வந்த பிறகு கேட்கவே வேண்டாம், போலீசார் எல்லாருக்கும் குஷி வந்துவிட்டது. மாஸ்க் இல்லை என்று கல்லாவை கட்டித் தள்ளிவிட்டனர். சாமானியர்களுக்கு நிலைமை இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் மிக வைரலானது. அதில் ஒரு இளைஞர் ராயல் என்பீஃல்டு வண்டியில் அமர்ந்துள்ளார்.
ராயல் என்பீஃல்டு வண்டியில் அமர்ந்து இருந்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவர் நம்பர் பிளேட்டில் இருந்ததுதான் ஆச்சரியம். அது என்னவென்றால் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தியின் பேரன் வண்டி என்று எழுதப்பட்டு இருந்தது. இது என்னடா கொடுமை..! நம்பர் பிளேட்டில் நம்பர் இருக்க வேண்டிய இடத்தில் இப்படி எழுதி இருக்கிறார் என்று அவரை குறித்து மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்தன. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர் காந்திக்கு திருமணமே ஆகவில்லை என்பதுதான். திருமணம் ஆகாத ஒருவருக்கு பேரன் எங்கிருந்து வந்தான் என்ற கேள்வியால் நாகர்கோவில் மக்களும் தமிழக மக்களும் இரண்டு நாட்களாக மண்டையை பிய்த்து கொண்டு இருந்தனர். Youtube Video Code Embed Credits: Polimer News
இந்த நிலையில் அந்த இளைஞர் எம்.ஆர்.காந்தியின் கார் ஓட்டுநர் கண்ணனின் மகன் அம்ரிஸ் என்பது தெரியவந்துள்ளது. எம்.ஆர். காந்தியை செல்லமாக தாத்தா என்று அழைப்பதால் அவர் நம்பர் ப்ளேட்டில் இவ்வாறு எழுதிவிட்டார் என்றும் சிறுபிள்ளை தெரியாமல் தவறு செய்துவிட்டார் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் அம்ரிஸ் இரண்டு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்த வீடியோ வைரலானது. கார் ஓட்டுநரின் பேரனே இப்படி பந்தா காட்டினால் உண்மையான பேரன் இருந்தால் அவ்வளவுதான் போல என்று ஓட்டு போட்ட மக்களே தலையில் அடித்துக் கொள்கின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in